ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான ஜெஹான்போரா புத்த ஸ்தூபி வளாகம் அறிவியல் பூர்வமாக அகழாய்வு செய்யப் பட்டுள்ளது.
குஷானர் காலத்தினைச் சேர்ந்த (கிபி 1-3 ஆம் நூற்றாண்டு) இந்த இடம் 10 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.
இதில் பல ஸ்தூபிகள், அப்சிடல் சைத்யாக்கள் (பிரார்த்தனை மண்டபங்கள்), விகாரங்கள் (துறவிகள் குடியிருப்புகள்), நகர்ப்புறக் குடியிருப்புகள் மற்றும் கலைப் பொருட்கள் உள்ளன.
காஷ்மீரைக் காந்தாரத்துடன் (ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதி) இணைக்கும் பண்டையப் பட்டு வர்த்தகப் பாதையினூடே ஜெஹான்போரா அமைந்துள்ளது.
பௌத்த சமயமானது, காஷ்மீரில் பேரரசர் அசோகரின் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) கீழ் தொடங்கி கனிஷ்கர் மற்றும் ஹுவிஷ்கர் ஆகியோரின் கீழ் குஷானர் ஆட்சியின் போது செழித்து வளர்ந்தது.