இந்தியாவின் அரிதான காட்டு ஆடான காஷ்மீர் மார்க்கோர் ஆடுகளில் (காப்ரா பால்கோனேரி காஷ்மெரியன்சிஸ்), 200–300 இனங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் உள்ளூர் அழிவை எதிர்கொள்கிறது.
இது மார்கோரின் (காப்ரா ஃபால்கோனெரி) ஒரு கிளையினமாகும் என்பதோடு மேலும் IUCN செந்நிறப் பட்டியலில் ஒட்டு மொத்த இனத்திற்கும் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் என்ற நிலையைப் பகிர்ந்து கொள்கிறது.
ஜம்மு & காஷ்மீரில் காணப்படுகின்ற இந்த இனம், முக்கியமாக காசினாக் தேசியப் பூங்கா, ஹிர்போரா வனவிலங்கு சரணாலயம், தட்டகுடி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் காரா கலி காப்பகம் ஆகியவற்றில் உள்ளது.
ஒரு சுற்றுச்சூழல் குறிகாட்டியாக விளங்கும் காஷ்மீர் மார்கோர், பனிச்சிறுத்தைகள், சிறுத்தைகள் மற்றும் ஓநாய்களுக்கு இரையாக உள்ளது என்பதோடுமேலும் இது மலை தாவரங்கள் மற்றும் மண் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
"மார்கோர்" என்ற இப்பெயர் பண்டைய நாட்டுப்புறக் கதைகளைப் பிரதிபலிக்கின்ற "பாம்பு - கொலையாளி" என்று பொருள்படும் பாரசீக மொழியிலிருந்து வந்தது.