கிசான் கடன் அட்டை திட்டத்தின் வசதியை மீன் வளர்ப்போருக்கும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் மத்திய அரசு விரிவாக்கம் செய்துள்ளது.
இது அவர்களின் தொழிலுக்கான மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.
இந்த அட்டையின் வசதியின் கீழ் தற்போது அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களின் தொழில்களுக்கான மூலதன தேவையைப் பூர்த்தி செய்ய அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெறலாம்.