மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் கியான் சுழற்சி என்ற ஒரு முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார்.
இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்ப மையத்தினால் மேம்படுத்தப்பட்டு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் ஒரு தொழில்நுட்ப வர்த்தக புத்தாக்க மையம் ஆகும்.
இந்த மையங்கள் நிறுவனங்களின் அறிவுசார் மூலதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் தொழில்முனைவுத் திறனை மேம்படுத்த உள்ளன.
இது செயற்கை நுண்ணறிவு, தொடரேடு (Block-chain), இணையவழி நேரடி அமைப்புகள், இணையவழிப் பாதுகாப்பு, இணையதளப் பொருட்கள் மற்றும் இயந்திர மனிதன் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தொழில் முனைவில் ஈடுபட ஊக்குவிக்கின்றது.