TNPSC Thervupettagam

கிரந்த குடீர்

January 29 , 2026 2 days 44 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் 'கிரந்த குடீர்' என்ற புத்தக இல்லத்தைத் திறந்து வைத்தார்.
  • கிரந்த குடிரில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி உள்ளிட்ட 11 செம்மொழி இந்திய மொழிகளில் சுமார் 2,300 புத்தகங்களின் தொகுப்பு உள்ளது.
  • இந்தத் தொகுப்பு காவியங்கள், தத்துவம், மொழியியல், வரலாறு, ஆட்சிமுறை, அறிவியல், பக்தி இலக்கியம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது.
  • சுமார் 50 பனை ஓலை, காகிதம், மரப்பட்டை மற்றும் துணி ஆகியவற்றில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
  • இந்தியாவின் கலாச்சார, இலக்கிய மற்றும் அறிவுசார் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்