“கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் சிவில் மெரிட் விருது”
February 18 , 2019 2367 days 696 0
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஸ்மா சுவராஜின் மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது, ஸ்பானிஷ் அரசாங்கம் அவருக்குப் புகழ்பெற்ற “கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் சிவில் மெரிட் விருது” வழங்கி கௌரவிக்க விருக்கின்றது.
இந்த விருதானது மைத்திரி நடவடிக்கையின் மூலம் இந்தியா ஒரு துரிதமான நடவடிக்கை எடுத்ததை அங்கீகரிப்பதற்காக ஸ்பானிஷ் அரசாங்கத்தினால் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வழங்கப்படவிருக்கிறது.
“மைத்திரி நடவடிக்கை” என்பது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, அந்நாட்டிலிருந்து 71 ஸ்பானிஷ் மக்களை மீட்டு அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியது.