அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட CSC SPV (Common Service Centres Special Purpose Vehicle - பொதுச் சேவை மையங்களின் சிறப்பு நோக்க வாகனம்) ஆனது கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியக் கிராமங்களின் மீதான முதல் கலாச்சார ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
இது ஒரு கைபேசி செயலி மூலம் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்விற்கு 'மேரா காவ்ன், மேரி தரோஹர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
குடிமக்கள் தங்கள் கிராமம், தொகுதி அல்லது மாவட்டத்தைத் தனித்துவமிக்க ஒன்றாக மாற்றுவதற்கு எவை எவை பங்காற்றும் என்பதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ளச் செய்வதன் மூலம் கிராம அளவில் உள்ள கலாச்சார அடையாளங்களை இது ஆவணப் படுத்தும்.