கிராமப்புற ஸ்டார்ட் அப் (புதிதாக தொழில் தொடங்குவோர்)
May 15 , 2019 2192 days 771 0
தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியானது (National Bank for Agriculture and Rural Development - NABARD) பின்வருவனவற்றிற்காக ரூ.700 கோடி மதிப்பிலான துணிகர முதலீட்டு நிதியை அறிவித்துள்ளது.
வேளாண் துறையில் பங்கு மூலதனங்கள்
கிராமப் புறத்தில் உள்ள ஸ்டார்ட் அப்-களின் மீது கவனம் செலுத்துதல்.
இந்த நிதியானது நபார்டின் ஒரு துணை நிறுவனமான நாப் துணிகர மூலதர நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
விவசாயம், உணவு மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்னுரிமை பெறவிருக்கின்றன.
NABARD
நபார்டு என்பது கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக முதலீடுகள் மற்றும் உற்பத்திக்கான கடன்களை வழங்கும் நிறுவனங்களுக்கான ஒரு தலைமை நிதியியல் அமைப்பாகும்.
இது 1982 ஆம் ஆண்டில் B. சிவராமன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இது குடிசைத் தொழில், சிறு தொழில் மற்றும் கிராமப்புறத் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியினை மேற்பார்வையிடுகின்றது.