இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுக்கான எரிவாயு விலை சூத்திரத்தினை மறுமதிப்பாய்வு செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரித் பரிக் குழு அமைக்கப்பட்டது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் ஆனது கிரித் பரிக் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கான அமைச்சரவை ஒப்புதலினைக் கோரி உள்ளது.
இந்த அறிக்கையானது கடைநிலை நுகர்வோருக்கு இயற்கை எரிவாயுவின் நியாயமான விலையை நிர்ணயிப்பதனைப் பரிந்துரைக்கிறது.
இயற்கை எரிவாயுவின் விலையானது ஆண்டிற்கு இருமுறை மாற்றியமைக்கப் படுகிறது.