TNPSC Thervupettagam

கிரீன் விசா (பசுமை நுழைவு இசைவு) - ஐக்கிய அரபு அமீரகம்

September 11 , 2021 1406 days 654 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது புதிய வகை விசாக்களை அறிவித்துள்ளது.
  • கிரீன் விசாவின் கீழ், வெளிநாட்டினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்திட  வேண்டிப் பணியளிப்பவரின் நிதியுதவியைப் பெறத் தேவையில்லை.
  • இந்தத் திட்டம், வெளிநாட்டினர் தங்களின் பழைய வேலையை இழந்தால், புதிய வேலையைத் தேடுவதற்கு என்று அவர்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலான சலுகைக் காலத்தை அனுமதிக்கும்.
  • நாட்டில் வேலை வாய்ப்புகளைத் தொடர்ந்துப் பெற்றிட வேண்டி வெளிநாட்டினர்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளை எளிதாக்கும் நோக்கத்தில் இது கொண்டு வரப் பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிற்குப் பணக்காரர்களை மற்றும் திறமையான தொழிலாளர்களை வரவேற்பதை நோக்கமாகக் கொண்டு 10 வருட "தங்க நுழைவு இசைவு" என்பதை அறிமுகப் படுத்தியது.
  • ஐக்கிய அரபு அமீரகம் தவிர, சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் சமீபத்தில் தங்கள் நாடுகளைப் பணக்கார முதலீட்டாளர்களுக்குத் திறந்து விட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்