கிரேட்டர் ஃபிளமிங்கோக்கள் (பெரும் பூநாரைகள்) - வீராணம் ஏரி
October 28 , 2026 3 days 58 0
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் 18 பெரும் பூநாரைகள் காணப்பட்டன; உள்நாட்டு நன்னீர் ஏரியான இங்கு இவை காணப்படுவது ஒரு அசாதாரண நிகழ்வாகும்.
பெரும் பூநாரைகள் (ஃபோனிகோப்டெரஸ் ரோசியஸ்) IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த (LC) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவை பொதுவாக கடலோர ஈரநிலங்கள், சேற்றுப் பகுதிகள், காயல்கள் மற்றும் ஆழமற்ற நீர்நிலைகளுடன் தொடர்புடையவையாகும்.
குறைந்த மழைப்பொழிவு, குறைந்த காவிரி நீர்வரத்து மற்றும் கடலோரச் சேற்றுப் பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஆகியவை இவற்றின் வழக்கமான வலசைப் போதல் முறையை மாற்றியிருக்கலாம்.
இந்த இனம் பொதுவாக குளிர்காலத்தில் கட்ச் வளைகுடாவிலிருந்து கிழக்குக் கடற்கரையை நோக்கி வலசை போகும்.