December 22 , 2025
4 days
51
- அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகம் ஆனது கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுப் பகுதியை அறிவித்துள்ளது.
- இந்த அறிவிப்பு ஆனது, கிரேட் நிக்கோபார் தீவின் மேம்பாட்டிற்கான ஒரு மாபெரும் திட்டத்தினை தயாரிக்க அனுமதிக்கிறது.
- மேம்பாட்டுப் பகுதியில் மொத்தம் 44.23 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய ஏழு வருவாய் கிராமங்கள் உள்ளன.
- இந்தப் பகுதியில், 8.88 சதுர கிலோமீட்டர்கள் பரப்பானது வன நிலமாக கருதப்படும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- கிரேட் நிக்கோபார் தீவிற்கான பெருந்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மொத்தப் பரப்பளவு 166.10 சதுர கிலோமீட்டர் ஆகும்.
- இந்த மேம்பாட்டுத் திட்டம் கிரேட் நிக்கோபார் பகுதியின் முழுமையான மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Post Views:
51