இது நான்கு நாட்கள் அளவிலான ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.
இதன் முதல் நாளானது கர்நாடகா முழுவதும் காணப்படும் 251 பறவை இனங்கள் பற்றி குடிமக்கள் மத்தியில் பதிவு செய்யும் நிகழ்வுடன் தொடங்கியது.
இது இணைய வழியிலான குடிமக்கள் சார்ந்த அறிவியல் அல்லது சமூகம் சார்ந்த ஒரு அறிவியல் திட்டமாகும்.
இது 1998 ஆம் அண்டில் கார்னல் பறவையியல் ஆய்வகம் மற்றும் தேசிய அதுபோன் சொசைட்டியினால் (National Audubon Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
உலகப் பறவை இனங்களின் வருடாந்திர இடம்பெயர்தலில் ஒன்று நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைப் பற்றி சரியாக புரிந்து கொள்வதற்கு அறிவியலாளர்களுக்கு இது உதவுகிறது என்பதே இந்த நிகழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
இது பற்றிய தரவுகள் உலகின் மிகப்பெரிய உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான குடிமக்கள் சார்ந்த ஒரு அறிவியல் (சமூகம் சார்ந்த) திட்டமான ‘இபெர்டு’ (eBird) என்பதுடன் இணைக்கப் பட்டுள்ளது.