கிளர்ச்சிக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் – திரிபுரா
September 10 , 2024 379 days 334 0
மத்திய அரசு மற்றும் திரிபுரா அரசு ஆகியவை இணைந்து வடகிழக்கு மாநிலத்தின் இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுடனான 12வது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களால் சுமார் 10,000 பேர் ஆயுதங்களைத் துறந்து பிரதான நடைமுறையில் இணைந்துள்ளனர்.
திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (NLFT) மற்றும் அனைத்து திரிபுரா புலிகள் படை (ATTF) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
NLFT மற்றும் ATTF உடனான ஒப்பந்தத்தின் கீழ், 328க்கும் மேற்பட்ட ஆயுதமேந்தியப் பணியாளர்கள் வன்முறையைக் கை விட்டு பொதுச் சமூகத்தின் மக்களுடன் இணைய உள்ளனர்.