அருகி வரும் கோலாக் கரடிகளின் எண்ணிக்கையில் மலட்டுத்தன்மை மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் கிளமிடியா நோயிலிருந்து அவற்றைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா உலகின் முதல் ஒற்றை தவணைத் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.
இந்தத் தடுப்பூசியானது இனப்பெருக்க வயது உள்ள கோலாக்களில் நோய்த் தாக்க அறிகுறிகளைக் குறைக்கிறது மற்றும் காடுகளில் கிளமிடியா பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பினைக் குறைந்தது 65% குறைக்கிறது.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கோலா கரடிகளின் எண்ணிக்கை 70% வரையிலான தொற்று விகிதங்களை எதிர்கொள்கிறது என்பதோடு இது உள்ளூரில் அவற்றின் அழிவை அச்சுறுத்துகிறது.
பல ஆஸ்திரேலிய மாகாணங்களில் கோலாக்கள் அருகும் நிலையில் உள்ளன என்ற நிலையில் மேலும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருந்தால், அவற்றின் அழிவு 2050 ஆம் ஆண்டிற்குள் சாத்தியமாகி விடும்.