கிளிமீன் (போல்போன்மெட்டோபோன் முரிகட்டும்) என்பது பவளப் பாறை அமைப்பின் ஒரு மிக முக்கியக் கூறாகும். ஆனால் இது தற்பொழுது சர்வதேச அளவில் அதிகமாக அருகிவரும் நிலையில் உள்ளது.
இந்த மீன் இனங்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அச்சுறுத்து நிலையில் உள்ளன.
இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய” நிலையில் உள்ளது.
மீனவர்களால் தற்செயலாக இந்த மீன் பிடிக்கப்படுதல், ஈட்டியைக் கொண்டு மீன் பிடிப்பவர்களின் தாக்குதல் மற்றும் பவளப் பாறைகளின் இழப்பு ஆகியவை இந்த வகை இனங்களுக்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தற்பொழுதுள்ள பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதிகளில் இருக்கும் பவளப் பாறைகளின் பாதுகாப்பானது அருகி வரும் கிளி மீனின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத் தேவையாகும்.