கிழக்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடச் செயலாக்கம்
October 19 , 2023 671 days 344 0
51,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட 1337 கிலோமீட்டர் நீளத்திலான கிழக்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் (EDFC) முழு வழித் தடமும் சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
கிழக்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தின் (EDFC) நியூ சஹ்னேவால் (பஞ்சாப்) - நியூ குர்ஜா (உத்தரப் பிரதேசம்) வரையிலான பிரிவில் 401 -கிலோ மீட்டர் நீளமுள்ள சரக்கு இரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மேற்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடமானது (WDFC) 1046 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இது குர்ஜா எனும் பகுதியினை மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு என்ற துறைமுகத்துடன் இணைக்கிறது.