21-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS) பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்றது.
உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காகப் பேச்சுவார்த்தை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு இந்த உச்சிமாநாடு அழைப்பு விடுத்தது.
உலகளாவிய மோதல்கள் உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பைப் பாதிக்கின்றன; சர்வதேச கடற்பரப்பில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டது.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா ஆதரவு தெரிவித்ததுடன், பயங்கரவாத அச்சுறுத்தலையும் சுட்டிக்காட்டியது.
மாலுமிகளுக்கான கூட்டுப் பயிற்சி மற்றும் அவசரகால பதிலளிப்பை மேம்படுத்த 'மாலுமிகள் பாதுகாப்பு முன்னெடுப்பு' (Seafarers’ Safety Initiative) முன்மொழியப்பட்டது.
இணையவழி மோசடி, இணையவழிக் குற்றங்கள் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த, தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் 'EAS இணையவழிக் குற்ற தடுப்பு மாநாடு' முன்மொழியப்பட்டது.
கடல்சார் வரலாறு, வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களைக் கொண்டாடும் வகையில், குஜராத்தின் லோத்தலில் 'EAS கடல்சார் பாரம்பரிய விழா' முன்மொழியப்பட்டது.
EAS நாடுகளிடையே கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்காக பீகாரின் நாளந்தாவில் 'EAS பல்கலைக்கழக மாநாடு' முன்மொழியப்பட்டது.