கீழடி மற்றும் பிற ஏழு இடங்களில் 11-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தொல்லியல் துறைக்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் (ASI) அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் விதிகள், 1959-இன் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்.
பட்டினமருதூர் (தூத்துக்குடி), கரிவலம்வந்தநல்லூர் (தென்காசி), மணிக்கொல்லை (கடலூர்), அடிச்சனூர் (விழுப்புரம்), வெள்ளலூர் (கோயம்புத்தூர்), தெலுங்கனூர்–மாங்காடு (சேலம்) மற்றும் நாகப்பட்டினம் ஆகியன அனுமதிக்கப்பட்ட பிற இடங்கள் ஆகும்.
தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம் 2025–26-இன் ஒரு பகுதியாக, அகழ்வாராய்ச்சிக்கான முன்மொழிவு மாநில அரசால் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகள் வழக்கமாகப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை நடத்தப்படுகின்றன.