சுமார் 1,155 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் வைகை வெள்ளப் பெருக்கில் கீழடி குடியிருப்புப் பகுதிகள் புதையுண்டதாக தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி ஆனது வைகை நதி வெள்ளச் சமவெளியில் அமைந்த ஒரு மேட்டுப் பகுதியில் உள்ளது.
சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் செங்கல் கட்டமைப்புகள், கால்வாய்கள், தரைகள் மற்றும் மட்பாண்டங்கள் அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
வண்டல் படிவு அடுக்குகள் ஆனது, செங்கல் கட்டமைப்புகளுக்கு கீழே அமைந்த கரடுமுரடான மணல் மற்றும் மேற்பரப்பில் உள்ள வண்டற்களிமண் அதிக சக்தி வாய்ந்த வெள்ளப் பாதிப்பினைக் குறிப்பதுடன், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் குறிக்கின்றன.
இந்தக் கண்டுபிடிப்புகள், ஹோலோசீன் பிற்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாறுபாடு மற்றும் தென்னிந்தியாவில் மனிதக் குடியிருப்புகளை சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகள் எவ்வாறு வடிவமைத்தன என்பதைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.