வடகிழக்கு தொழில்நுட்பப் பயன்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையமானது குங்குமப்பூ கிண்ணத் திட்டத்தின் கீழ் (Saffron Bowl project), அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் குங்குமப் பூ சாகுபடிக்காக ஒரு சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
காஷ்மீரின் ஒரு சில பகுதிகளுக்குள்ளேயே இருந்த இந்தியாவின் குங்குமப்பூக் கிண்ணம் (உற்பத்திப் பகுதி) ஆனது தற்போது வடகிழக்குப் பகுதியிலும் தனது கிளைகளை விரித்துள்ளது.