ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பால் 'சிறந்த சுற்றுலா கிராமம்' என்று உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தோர்டோ கிராமம், தற்போது முழுமையாக சூரிய சக்தியில் இயங்குகிறது.
இது குஜராத்தில் உள்ள மற்ற மூன்று சூரிய சக்தி கிராமங்களான மோதேரா, சுகி மற்றும் மசாலி ஆகியவற்றின் பாட்டியலில் இணைகிறது.
பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனாவின் கீழ், 81 வீடுகளின் மேற்கூரையில் 177 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் தகடுகள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு குடியிருப்பிலும் உள்ள மின்சார இணைப்பை சூரிய சக்தியில் இயங்கச் செய்கிறது.
சூரிய சக்தி அமைப்பு ஆனது ஆண்டுதோறும் 2.95 லட்சம் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 16,064 ரூபாய் செலவு மிச்சமாகும்.
இந்தக் கிராமம் ஆண்டுதோறும் 13 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டும் என்று எதிர் பார்க்கப் படுவதுடன், மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் உபரி மின்சாரம் கூடுதல் வருமானத்தை வழங்கும்.