குஜராத்தின் புதிய முதல்வர்
December 17 , 2022
869 days
419
- குஜராத்தின் 18வது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றுள்ளார்.
- படேல் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
- அவர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. ஏழாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
- சட்டமன்றத்தில் உள்ள மொத்த 182 இடங்களில் இந்தக் கட்சி 156 இடங்களை வென்று உள்ளது.
- காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Post Views:
419