குஜராத்தின் ஹன்சல்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பசுமைப் போக்குவரத்து இயக்க முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தார் என்பதோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட e-Vitara எனும் சுசுகியின் முதல் உலகளாவிய மூலோபாய மின்கலத்தில் இயங்கும் மின்சார வாகனத்தினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக TDS (தோஷிபா-டென்சோ-சுசுகி) லித்தியம்-அயனி மின்கல ஆலையில் மின் கலங்களை உற்பத்தி செய்ய உள்ளன.
மாருதி சுசுகி நிறுவனமானது, பிரதான் மந்திரி E-Drive திட்டத்தின் கீழ் ஒரு கலப்பின ஆம்புலன்ஸ் முன்மாதிரியை உருவாக்கியது.