குஜராத் - இந்திய ஓநாய்களின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான வரைபடம்
January 7 , 2025 228 days 252 0
குஜராத் மாநில அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது, அந்த மாநிலத்தில் இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை 222 ஆக உள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
சுமார் 80 என்ற எண்ணிக்கையுடன், பாவ்நகர் மாவட்டம் ஆனது குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓநாய்களைக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து நர்மதா மாவட்டத்தில் 39, பனஸ்கந்தாவில் 36, சுரேந்திரநகரில் 18, ஜாம்நகர் மற்றும் மோர்பியில் தலா 12, கட்ச் மாவட்டத்தில் 9 என்ற அளவில் ஓநாய்கள் உள்ளன.
அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வேலவதாரில் உள்ள பிளாக்பக் (புல்வாய்) தேசியப் பூங்கா மற்றும் தோலேராவைச் சுற்றியுள்ளப் பகுதிகளை உள்ளடக்கிய பாவ் நகரில் உள்ள பால் பகுதியும் அடங்கும்.
இந்த வரைபடமானது, அவற்றின் முக்கிய வாழ்விடங்களை இணைக்கும் முக்கியமான 'வழித்தடங்களை' அடையாளம் காண உதவும்.