TNPSC Thervupettagam

குஜராத் வரம்பு மற்றும் வர்த்தக அமைப்பில் வெற்றி

April 30 , 2025 17 hrs 0 min 14 0
  • நுண்துகள் உமிழ்வுகள் தொடர்பான வர்த்தகத்திற்கான உலகின் முதல் சந்தையானது, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குவதாக இந்தியாவில் மேற் கொள்ளப் பட்ட ஒரு புதிய ஆய்வுக் கண்டறிந்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, தொழில்துறை மாசுபாட்டைக் குறைத்துள்ளது, ஆலைகளுக்கான செலவினங்களைக் குறைத்துள்ளது மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுடனான ஒரு இணக்கத்தினையும் மேம்படுத்தியுள்ளது.
  • உமிழ்வு வர்த்தக திட்டம் (ETS) என்பது நுண்துகள் மாசுபாட்டிற்கான ஒரு வரம்பு மற்றும் வர்த்தக அமைப்பாகும்.
  • இந்தத் திட்டமானது ஒரு முக்கிய தொழில் மையமான குஜராத்தின் சூரத் நகரில் தொடங்கப் பட்டது.
  • இது சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்திக் கொள்கை நிறுவனத்துடன் இணைந்து குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் (GPCB) ஒரு சோதனைத் திட்டமாக உருவாக்கப்பட்டது.
  • இத்திட்டம் ஆனது ஐந்தாண்டுகளுக்கு மேல் அமல்படுத்தப்படும்.
  • இது உலகில் நுண்துகள் உமிழ்வு வர்த்தகத்திற்கான முதலாவது மற்றும் இந்தியாவின் முதல் மாசுபாட்டு உமிழ்வு வர்த்தகத் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், 318 நிலக்கரியைப் பயன்படுத்தும் பெரும் தொழிற்சாலைகளில் நுண்துகள் உமிழ்வின் நிகழ்நேரக் கண்காணிப்பினை அனுமதிக்கின்றத் தொடர்ச்சி ஆன உமிழ்வுக் கண்காணிப்பு அமைப்புகளை (CEMS) நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
  • இது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு வருடாந்திரச் சோதனை முறையினை மாற்றி அமைத்தது.
  • தொழிற்சாலைகளுக்கு உமிழ்வு வரம்புகள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன அல்லது உமிழ்வு அனுமதிகளை வாங்க அனுமதிக்கப் படுகின்றன என்பதோடு இவை ஒவ்வொன்றும் 1 கிலோகிராம் நுண்துகள்களை வெளியிடுவதற்கான ஒரு உரிமையை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்