குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான நாக்பூர் தீர்மானம்
December 24 , 2019 2031 days 680 0
மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடத்தப்பட்ட ‘பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துதல் - அரசாங்கங்களின் பங்கு’ என்ற பிராந்திய மாநாட்டின் போது ‘நாக்பூர் தீர்மானம் - குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறை’ என்ற ஒரு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்த மாநாடானது மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் இணைந்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையினால் (Department of Administrative Reforms and Public Grievances - DARPG) ஏற்பாடு செய்யப் பட்டது.
மத்திய அரசானது வெளிப்படைத் தன்மை, குடிமக்களை மையமிட்ட திட்டங்கள் மற்றும் குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
சிறந்த ஆளுகைக்காக இதற்கு முன்னர் ஷில்லாங் பிரகடனம் மற்றும் ஜம்மு தீர்மானம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப் பட்டு உள்ளன.
முக்கிய சிறப்பம்சங்கள்
சிறந்த முறையில் சேவைகளை வழங்கல்
குறைகளைத் தீர்த்தல்
டிஜிட்டல் தளங்களின் மூலம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்