TNPSC Thervupettagam

குடிமக்களை மையப்படுத்திய சீர்திருத்தங்கள்

January 25 , 2021 1606 days 645 0
  • ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை முறையைச் செயல்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு/பயன்பாட்டுச் சீர்திருத்தங்கள் மற்றும் மின்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை குடிமக்களை மையமாகக் கொண்ட நான்கு சீர்திருத்தங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்தச் சீர்திருத்தங்கள் நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையால் (Department of Expenditure) நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
  • மத்திய அரசானது மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்பை அவர்களின் மொத்த மாநில உற்பத்தியில் 2% என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளது.
  • இது ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
  • கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களைக் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு மே 17 அன்று இது அறிவிக்கப்பட்டது.
  • மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மட்டுமே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை முறை, வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு/பயன்பாட்டுச் சீர்திருத்தங்கள் என்ற மூன்று சீர்திருத்தங்களை நிறைவு செய்துள்ளன.
  • 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை' வெற்றிகரமாக மேற்கொண்ட நான்காவது மாநிலமாக மணிப்பூர் திகழ்கிறது.
  • முன்னதாக, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியன நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன.
  • வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக மேற்கொண்ட நாட்டின் 8வது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
  • ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய ஏழு மாநிலங்கள் இந்த சீர்திருத்தங்களை ஏற்கனவே நிறைவேற்றியுள்ளன.
  • ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை முறையை அமல்படுத்திய 11வது மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை பிற மாநிலங்களாகும்.
  • உத்தரப் பிரதேசம் இதில் அதிகப் பயனடைகிறது, அதனையடுத்து  கர்நாடகா மற்றும் குஜராத்தை ஆகிய மாநிலங்கள் இதில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்