குடிமக்களை மையமாகக் கொண்ட முதலாவது IMD பொலிவுறு நகரங்கள் குறியீடு 2019
October 8 , 2019 2125 days 855 0
முதன்முதலில் சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தால் (Institute for Management Development - IMD) நடத்தப்பட்ட பொலிவுறு நகரங்கள் குறியீடு 2019 என்ற குறியீட்டில், ஹைதராபாத் நகரமானதுஇந்திய நகரங்களில் 67வது இடத்தைப் பிடித்தது.
அதைத் தொடர்ந்து புது டெல்லி 68வது இடத்தில் இருந்தது. மும்பை மற்றும் பெங்களூரு முறையே 78 மற்றும் 79வது இடங்களைப் பிடித்தன.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
தர வரிசைக்கு மொத்தம் 102 நகரங்கள் மதிப்பிடப்பட்டன.
இந்த அறிக்கை சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக் கழகத்துடன் இணைந்து IMD உலகப் போட்டி மையத்தின் பொலிவுறு நகரஆய்வகத்தால் வழங்கப் பட்டது.