சமீபத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் கோவிட் – 19ற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசிற்கு உதவுவதற்காக தனது ஊதியத்தில் 30% வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையானது நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியங்களை உயர்த்தியுள்ளது.
தற்பொழுது, இந்தியக் குடியரசுத் தலைவரின் மாதாந்திர ஊதியமானது முந்தைய 1.5 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியமானது 1.10 இலட்சத்திலிருந்து 4 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநில ஆளுநரின் ஊதியமானது 3.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் பதவிக் காலத்தின் போது அவரின் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளைக் குறைக்கக் கூடாது என்று சரத்து 59 கூறுகின்றது.
ஆனால் இந்த சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்தத் தொகையை நன்கொடையாக வழங்குகின்றார். அவரது ஊதியத்தின் மீது அத்தொகை பிடித்தம் செய்யப்படவில்லை.
இதே சரத்தானது குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை வாடகைக் கட்டணம் எதுவுமின்றிப் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றது.