குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்திலிருந்து ஒரு நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை மேற்கொண்டார்.
A.P.J. அப்துல் கலாமுக்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
கார்வார் துறைமுகம் மேற்குக் கடற்கரையில் இந்தியாவின் மிகவும் உத்தி சார் கடற்படைத் தளங்களில் ஒன்றாகும்.
முர்மு அவர்கள் ரஃபேல் மற்றும் சுகோய்-30 MKI போர் விமானங்களிலும் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதோடுஇது ஆயுதப் படைகளுடனான குடியரசுத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடுபாடுகளைக் குறிக்கிறது.
அவர் ஓல் சிக்கி நூற்றாண்டு விழாவிலும் ஜார்க்கண்டில் நடைபெற்ற ஜாம்ஷெட்பூரின் தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.