குடியரசு தினத்திற்கான காட்சிப்பட அணிவகுப்பின் வெற்றியாளர்கள்
February 6 , 2021 1678 days 691 0
உத்தரப் பிரதேசத்தின் இராமர் கோயில் காட்சிப் படமானது அனைத்துக் காட்சிப் படங்களிடையே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இது 2021 ஆம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது காட்சிப் படுத்தப் பட்டது.
இதன் கருத்துரு, “அயோத்தியா : உத்தரப் பிரதேசத்தின் கலாச்சாரப் பாரம்பரியம்” என்பதாகும்.
திரிபுரா மாநிலக் காட்சிப் படமானது குடியரசு தினக் காட்சிப் பட அணிவகுப்பில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலக் காட்சிப் படமானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிடையே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் கருத்துரு, “தேவ பூமி – தெய்வங்களின் இருப்பிடம்” என்பதாகும்.
மத்தியப் பொதுப் பணித் துறையின் காட்சிப் படமானது ஆயுதப் படை வீரர்களின் உயிர்த் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு சிறப்புப் பரிசைப் பெற்று உள்ளது.