TNPSC Thervupettagam

குடியரசு தின காட்சிப் பீடம் – 2022

January 29 , 2022 1284 days 561 0
  • புதுடெல்லியில் உள்ள ராஜ்பாத் எனுமிடத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம் மற்றும் அணி வகுப்பு நடத்தப் பட்டன.
  • இந்த ஆண்டு 12 மாநிலங்களின் காட்சிப் பீடங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன.
  • அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தர காண்ட் ஆகிய மாநிலங்களின் காட்சிப் பீடங்கள் இந்த ஆண்டு அணிவகுப்பில் காட்சிப் படுத்தப் பட்டன.
  • கூடுதலாக மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் காட்சிப் பீடங்கள் இந்த ஆண்டு அணி வகுப்பில் பங்கேற்றன.
  • வான்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் காட்சிப் பீடமானது முதல்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றது.
  • இந்த காட்சிப் பீடத்தின் கருத்துருவானது, “உடான்-உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்” (Udaan - Ude Desh ka Aam Naagrik) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்