குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 என்பதற்கு எதிரான தீர்மானம்
September 13 , 2021 1431 days 742 0
குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 என்ற சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபை ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியதில் தமிழ்நாடு மாநிலமானது கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுடன் சேர்ந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கம், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த, இந்து, சீக்கியர், சமணர், பெளத்தர், பார்சி மற்றும் கிறிஸ்தவர் – போன்ற சமயங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மைச் சமூகத்தினருக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதாகும்.
திரிபுரா, மிசோரம், அசாம் மற்றும் மேகாலயா போன்ற பழங்குடியினர் வாழும் பகுதிகள் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ள ஒரு காரணத்தால், இந்தச் சட்டமானது அந்தப் பகுதிகளுக்குப் பொருந்தாது.
மேலும், 1873 ஆம் ஆண்டின் வங்காளக் கிழக்கு எல்லைக் கட்டுப்பாடு என்பதின் கீழ் அறிவிக்கப்பட்ட உள்நாட்டு நுழைவு அனுமதியின் கீழ் வரும் பகுதிகளுக்கும் இது பொருந்தாது.