TNPSC Thervupettagam

குடியுரிமை (திருத்தச்) சட்டம், 2019

December 15 , 2019 1984 days 3543 0
  • குடியுரிமைத் திருத்த மசோதா (Citizenship Amendment Bill - CAB), 2019 என்பதனை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவானது
    • மக்களவையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 09 அன்றும்
    • மாநிலங்களவையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்றும்
  • நிறைவேற்றப் பட்டுள்ளது.
  • இந்த மசோதாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று தனது ஒப்புதலை வழங்கினார்.
  • இந்தச் சட்டமானது பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள 6 சமூகங்களை (இந்து, கிறித்தவர், சீக்கியர், சமணர், பௌத்தர், மற்றும் பார்சி) சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முயல்கின்றது.
  • இது முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவின் மூன்று அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களை இந்தியக் குடிமக்களாக மாற்றுவதை எளிதாக்குகின்றது.

முக்கிய அம்சங்கள்

  • இந்த மசோதாவானது குடியுரிமைச் சட்டம் 1955ஐ திருத்துகின்றது.
  • முதன்முறையாக, இந்தச் சட்டமானது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்க இருக்கின்றது.
  • இந்தத் திருத்தமானது, ஒருவர் குடியுரிமையைப் பெறுவதற்கு இந்தியாவில் வசிக்க வேண்டிய கால அளவான 11 ஆண்டுகள் என்ற ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை 5 ஆண்டுகளாகத் தளர்த்துகின்றது.
  • விதிவிலக்குகள்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் பின்வரும் இரண்டு வகைகளுக்குப் பொருந்தாது:
    • “உட்கோட்டு நுழைவு அனுமதி முறையினால்” (அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர்) பாதுகாக்கப்பட்டு வரும் மாநிலங்கள்.
    • அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள் (அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம்).

பின்னணி

  • இந்தியாவில் குடியுரிமையானது  1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தால் கட்டுப்படுத்தப் படுகின்றது.
  • இந்தக் குடியுரிமைச் சட்டமானது இதுவரை 1986, 1992, 2003, 2005 மற்றும் 2016 போன்ற  ஆண்டுகளில் திருத்தப் பட்டுள்ளன.
  • இச்சட்டமானது பிறப்பின் மூலம், மரபு வழியின் மூலம், பதிவு செய்தல் மூலம், இயல்புரிமை மூலம் மற்றும் மற்ற பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதன் மூலம் ஆகிய ஐந்து முறைகளின் வாயிலாக இந்தியாவில் குடியுரிமையைப் பெறலாம் என்று குறிப்பிடுகின்றது.
  • இருப்பினும், சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் இந்தியக் குடிமக்களாக மாற முடியாது.
  • தற்பொழுது திருத்தப்பட்ட இந்தச் சட்டமானது சட்ட விரோதமாக குடியேறுபவர்களை வரையறுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்