TNPSC Thervupettagam

குடியுரிமை (திருத்த) விதிகள், 2026 – முக்கிய மாற்றங்கள்

May 4 , 2026 16 hrs 0 min 62 0
  • வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் குடியிரிமை (OCI) செயல்முறைகளை நெறிப்படுத்துவதற்காக குடியுரிமை (திருத்த) விதிகள், 2026-ஐ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • சிறு வயது குழந்தைகள் ஒரே நேரத்தில் இந்திய கடவுச்சீட்டு/பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகிய இரண்டையும் வைத்திருக்க முடியாது.
  • OCI அட்டைகளானது இனி நேரடி அட்டைகளுடன் மின்னணு வடிவத்திலும் (e-OCI) வழங்கப்படலாம்.
  • பதிவு செய்தல் உட்பட அனைத்து OCI சேவைகளும் முழுமையாக இணையவழிக்கு மாற்றப்பட்டுள்ளன.
  • OCI அட்டையை ரத்து செய்யவும், துறக்கவும் டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதுடன், நேரடி அட்டையை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • விமான நிலையங்களில் விரைவாக நுழைவதற்காக, விண்ணப்பதாரர்கள் 'விரைவுப் பாதை குடியேற்றத்திற்காக' (FTI) தங்களது உயிரியளவியல் தரவுகளைப் பகிரலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்