2015 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளி நாட்டினர் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனை நடவடிக்கையிலிருந்து உள்துறை அமைச்சகம் (MHA) விலக்கு அளித்தது.
செல்லுபடியாகும் கடவுச் சீட்டு, பயண ஆவணங்கள் அல்லது நுழைவு இசைவுச் சீட்டுகள் இல்லாத அகதிகளுக்கு, அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் மற்றும் வெளியேறும் வசதியை வழங்குகிறது.
பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் செப்டம்பர் 02 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) உத்தரவின் கீழ் சட்ட விரோத குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.
2025 ஆம் ஆண்டு சட்டம் ஆனது ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கிறது.
2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தாமாக முன்வந்து, சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கைத் தமிழர்களுக்கான நுழைவு இசைவுக் கட்டணங்கள் மற்றும் தங்கியிருக்கும் காலத்தினைக் கடந்ததற்கான தண்டனைகளை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேச மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு சிறுபான்மைச் சமூகங்களுக்கும் மத்திய அரசு விலக்கு அளித்தது.
இந்த ஆறு சமூகங்களில் மதத் துன்புறுத்தல் அல்லது அச்சத்தை எதிர்கொள்ளும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அடங்குவர்.
இந்த விலக்கு ஆனது, இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பான அவசியப் படிநிலையான நீண்ட கால நுழைவு இசைவுச் சீட்டுகளுக்கு (LTV) விண்ணப்பிக்க அவர்களுக்கு உதவுகிறது.
குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 ஆனது இந்தச் சமூகங்கள் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்தால் மட்டுமே அவர்களுக்கு குடியுரிமையை அனுமதிக்கிறது.
இந்த விலக்கு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு அப்பால் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கால வரம்புத் தேதியை நீட்டிக்காது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆவணமற்றப் புலம்பெயர்ந்தோர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை இந்த விலக்கு தடுக்கிறது மற்றும் அவர்கள் தங்குவதற்கு உதவுகிறது.
குடியுரிமைச் சட்டம், 1955 ஆனது, 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்த பிறகு குடியுரிமை பெற அனுமதிக்கிறது, அதே நேரத்தில் CAA தகுதியான சமூகங்களுக்கு இந்தக் கால வரம்பினை 5 ஆண்டுகளாகக் குறைக்கிறது.
இந்த விலக்கு உத்தரவு ஆனது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்த அல்லது ஆவணங்கள் காலாவதியான நபர்களுக்குப் பொருந்தும்.