குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 விதிகள்
September 15 , 2025 8 days 64 0
மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) சமீபத்தில் இந்தச் சட்டத்தின் விதிகள், உத்தரவு மற்றும் விலக்கு உத்தரவை அறிவித்தது.
இது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 என்பதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
வெளிநாட்டினர் மற்றும் குடியேற்றம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஒழுங்குபடுத்துவதற்காக நாடாளுமன்றம் ஏப்ரல் மாதத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
இது பாஸ்போர்ட் (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டம், 1920, வெளிநாட்டினர் பதிவுச் சட்டம், 1939, வெளிநாட்டினர் சட்டம், 1946 மற்றும் குடியேற்ற (கொண்டு வருபவர்களின் பொறுப்பு) சட்டம், 2000 போன்ற பல சட்டங்களை ரத்து செய்து மாற்றியது.
முதல் முறையாக, இவ்விதிகள் குடியேற்றப் பணியகத்தை (BOI) "குடியேற்ற மோசடி வழக்குகளை விசாரிக்க" சட்டப்பூர்வமாக நியமிக்கின்றன மற்றும் வெளிநாட்டினரை அடையாளம் காண, நாடு கடத்த அல்லது அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், குடியேற்றத் தரவுத் தளத்தை ஒன்றிணைத்துப் பராமரிக்கவும் மாநிலங்களை ஒருங்கிணைக்கின்றன.
முதலாவதாக, இவ்விதிகள் அனைத்து வெளிநாட்டினரின் பயோமெட்ரிக் தகவல்களையும் பதிவு செய்வதற்கான சட்ட ஏற்பாட்டைச் சேர்க்கின்றன.
இதுவரை அசாமிற்கு மட்டும் தனித்துவமான வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு (FT), முதல் வகுப்பு நீதித்துறை நீதிபதியின் அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன.
ஒரு நபர் "வெளிநாட்டவர் அல்ல" என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கத் தவறினால், அவர் தடுப்புக்காவல் அல்லது தடுப்பு மையத்திற்கு அனுப்ப இது வழி வகுக்கிறது.
முன்னதாக இது நிர்வாக உத்தரவுகள் மூலம் செயல்படுத்தப்பட்டது.
2025 ஆம் ஆண்டு உத்தரவு, 1964 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் (தீர்ப்பாய) உத்தரவை மாற்றியது.
தேசியம் மறுக்கப்பட்ட ஒருவர் நேரில் ஆஜராகத் தவறினால், வெளிநாட்டுத் தீர்ப்பாயங்கள் அவருக்கு கைது வாரண்டுகளை பிறப்பிக்க இது அதிகாரம் அளிக்கிறது.
அசாமில் தற்போது மொத்தம் 100 தனித்துவமான வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் செயல்பாட்டில் உள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2019 ஆம் ஆண்டு அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியிடப்பட்ட பிறகு தனித்துவமான வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதும் மீண்டும் அசாமிற்கு மட்டுமே தனித்துவமானது.
இந்த உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்றாலும், வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் அசாமில் மட்டுமே செயல்படுகின்றன.
மற்ற மாநிலங்களில் சட்டவிரோத குடியேறி உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுகிறார்.
இந்த உத்தரவு, எல்லைப் பாதுகாப்புப் படைகள் அல்லது கடலோரக் காவல்படை, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளின் பயோ மெட்ரிக் தகவல்கள் மற்றும் கிடைக்கக் கூடிய மக்கள்தொகை விவரங்களை மத்திய அரசின் நியமிக்கப்பட்ட இணைய தளத்தில் பதிவு செய்த பிறகு, அவர்களைத் திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்களைத் தடுக்கச் சட்டப் பூர்வமாக அனுமதிக்கிறது.
வங்காளதேசம் மற்றும் மியான்மர் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் அசாம் ரைபிள்ஸ் (AR) ஆகியவை உள்துறை அமைச்சகத்தின் நிர்வாக உத்தரவுகள் மூலம் இதைப் பயிற்சி செய்து வந்தன.
இப்போது, இது சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.