இந்தியக் குடும்பங்கள் நிதிச் சொத்துக்களை உருவாக்குவதை விட வேகமாக நிதிக் கடனை குவித்து வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2019 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வருடாந்திர நிதிச் சொத்துக்கள் 48% வளர்ந்தன.
அதே காலகட்டத்தில், வருடாந்திர நிதிப் பொறுப்புகள் 102% அதிகரித்தன.
குடும்பங்கள் 2019–20 ஆம் ஆண்டில் நிதிச் சொத்துக்களில் 24.1 லட்சம் கோடி ரூபாயைச் சேர்த்தன என்ற நிலையில்இது 2024–25 ஆம் ஆண்டில் 35.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
2019–20 ஆம் ஆண்டில் 7.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிதிப் பொறுப்புகள் 2024–25 ஆம் ஆண்டில் 15.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தன.
2019–20 ஆம் ஆண்டில் 12% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) நிதிச் சொத்துக்களின் பங்கு 2024–25 ஆம் ஆண்டில் 10.8% ஆகக் குறைந்துள்ளது.
அதே காலக் கட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பொறுப்புகளின் பங்கு 3.9 சதவீதத்திலிருந்து 4.7% ஆக அதிகரித்துள்ளன.
2019–20 ஆம் ஆண்டில் 32% ஆக இருந்து, 2024–25 ஆம் ஆண்டில் மொத்தச் சொத்துக்களில் 33.3% ஆக இருந்த வங்கி வைப்புத் தொகையானது முக்கியச் சேமிப்பு வழித் தடமாக இருந்தது.
2019–20 ஆம் ஆண்டில் 7.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வணிக வங்கிகளில் வைப்புத் தொகையானது 2024–25 ஆம் ஆண்டில் 54% வளர்ச்சியுடன் 11.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
2019–20 ஆம் ஆண்டில் 61,686 கோடி ரூபாயாக இருந்த பரஸ்பர நிதிகளில் முதலீடுகள் 655% அதிகரித்து, 2024–25 ஆம் ஆண்டில் 4.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
மொத்தக் குடும்பச் சொத்துக்களில் பரஸ்பர நிதிகளின் பங்கு இந்த காலக் கட்டத்தில் 2.6 சதவீதத்திலிருந்து 13.1% ஆக அதிகரித்துள்ளது.
2019–20 ஆம் ஆண்டில் 11.7% ஆக இருந்த நாணய வைத்திருப்புகளின் பங்கு 2024–25 ஆம் ஆண்டில் 5.9% ஆகக் குறைந்துள்ளது.