குடுவையிடப்பட்ட தண்ணீரில் குறுகிய அளவிலான மற்றும் நுண்ணிய நெகிழிகள்
January 12 , 2024 669 days 512 0
ஒவ்வொரு லிட்டர் குடுவை தண்ணீரிலும் 110,000 முதல் 370,000 நெகிழித் துகள்கள் உள்ளன.
இது முந்தைய அதிகபட்ச மதிப்பீடுகளை விட தோராயமாக மூன்று முதல் பத்து மடங்கு அதிகமாகும்.
அவற்றில் 90 சதவீதம் ஆனது நுண்ணிய அளவிலானவை ஆகும் (1 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவு).
இந்த நுண் நெகிழிகள் குறு நெகிழிகளை விட சிறியவை மற்றும் மனித உடல் ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
குறு நெகிழிகள் (5 மி.மீ. முதல் 1 மைக்ரோமீட்டர் வரை) போலல்லாமல், நுண் நெகிழிகள், இதயம் மற்றும் மூளையை அடைவதற்கு முன்பு குடல் மற்றும் நுரையீரலில் இருந்து நேரடியாக இரத்த ஓட்டத்தில் நுழையக் கூடியது.