குனோ தேசியப் பூங்காவிற்கு 12 சிவிங்கிப் புலிகள் வருகை
February 22 , 2023 865 days 406 0
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேசத்தினை வந்தடைந்தன.
ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் (KNP) அமைந்துள்ள தனிமைப் படுத்தப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில் அவை விடுவிக்கப்பட்டன.
இந்த 12 சிவிங்கிப் புலிகளின் சேர்க்கையுடன் குனோ தேசியப் பூங்காவில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக எட்டு அதிவேக நிலவாழ் விலங்குகள் நமீபியாவிலிருந்து கொண்டு வரப் பட்டதற்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த 12 சிவிங்கிப் புலிகள் இங்கு கொண்டு வரப் பட்டன.
இந்தியாவில் வாழ்ந்த கடைசி சிவிங்கிப் புலியானது, 1947 ஆம் ஆண்டில் இன்றைய சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் இறந்ததனால், இது 1952 ஆம் ஆண்டில் அழிந்து விட்ட இனமாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேசியப் பூங்காவானது, விந்தியாச்சல் மலைகளின் வடக்குப் பகுதியில் 700 சதுர கி.மீ. பரப்பளவில் பரவிக் காணப்படுகிறது.