TNPSC Thervupettagam

குனோ - ராஜஸ்தான் சிறுத்தைகள் இடப்பெயர்வு

March 13 , 2026 5 days 68 0
  • குனோ தேசியப் பூங்காவிலிருந்து 60-70 கி.மீ தூரம் பயணித்த இரண்டு சிறுத்தைகள், பாரன் பகுதியின் மாங்க்ரோல் சரகம் மற்றும் பாஞ்ச் அம்லி காப்பகத்தில் கண்டறியப் பட்டுள்ளன.
  • KP2 மற்றும் KP3 என்று பெயரிடப்பட்ட அந்த சிறுத்தைகள், பார்வதி ஆற்றின் இருபுறமும் சுமார் 6 கி.மீ இடைவெளியில் உள்ளன.
  • இவை சிறுத்தை திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளுக்கு இந்தியாவில் பிறந்த முதல் தலைமுறை குட்டிகள் ஆகும்.
  • இத்திட்டம் குனோ-காந்தி சாகர் நிலப்பரப்பிற்குள் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வை அனுமதிக்கிறது.
  • ராஜஸ்தானின் 7 மாவட்டங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தின் 8 மாவட்டங்களை உள்ளடக்கிய 17,000 சதுர கி.மீ பரப்பளவிலான குனோ-காந்தி சாகர் மாநிலங்களுக்கு இடையேயான வனவிலங்கு வழித்தடத் திட்டத்திற்கு இது துணையாக அமைகிறது.
  • சிறுத்தை திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று போட்ஸ்வானாவிலிருந்து ஒன்பது சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தன.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து, இந்தியாவிற்குச் சிறுத்தைகளை அனுப்பும் மூன்றாவது ஆப்பிரிக்க நாடு போட்ஸ்வானா ஆகும்.
  • 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப் படுத்துவதே சிறுத்தை திட்டத்தின் நோக்கமாகும்.
  • தற்போது மூன்று வளர்ந்த சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்