TNPSC Thervupettagam

குப்பைத் திருவிழா 2026

January 23 , 2026 3 days 61 0
  • தமிழ்நாடு அரசு மூன்று நாட்கள் அளவிலான மாநிலம் தழுவிய குப்பைத் திருவிழா (குப்பை சேகரிப்பு இயக்கம்) நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இந்த இயக்கம் ஜனவரி 21 முதல் 23, 2026 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடத்தப்படும்.
  • இந்த முன்னெடுப்பு 2025 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தூய்மைப் பிரச்சாரத்தின் (தூய்மை இயக்கம்) ஒரு பகுதியாகும்.
  • முன்னதாக, 2025 ஆம் ஆண்டின் ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை, அரசு அலுவலகங்களில் நான்கு கட்ட குப்பைச் சேகரிப்பு நடத்தப்பட்டு, 2,877 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
  • சேகரிக்கப்பட்ட கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு 3.79 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப் பட்டது.
  • சென்னை மாநகராட்சியில் (GCC), இந்த இயக்கத்திற்காக 200 குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்