"Reducing Methane Emissions from Landfills: The potential of biocover systems" என்ற ஒரு அறிக்கையை Climate and Clean Air Coalition என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
உயிரியல் உறை அமைப்புகள் குப்பைக் கிடங்குகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் உமிழ்வைத் திறம்பட குறைப்பதோடு, காற்றின் தரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உயிரியல் உறைகள்/மூடகம் என்பது இயற்கையாகத் தோன்றும் பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி மீத்தேனை குறைந்த தீங்கு விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாற்றும் ஒரு நுண்ணுயிர் அமைப்பாகும்.
இவை நீண்ட காலத்திற்கு 50 சதவீதம் வரையிலான மீத்தேன் உமிழ்வைக் குறைக்க உதவும் என்பதோடுஇது கழிவு மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகளாவிய மனிதனால் உருவாக்கப்படும் மீத்தேன் உமிழ்வில் குப்பை கிடங்குகள் சுமார் 11 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன.