அமெரிக்காவில் கும்பல் கொலைகளை வெறுக்கத்தக்க ஒரு குற்றமாக அறிவிக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட்டுள்ளார்.
எம்மெட் டில் கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்டம் என்று இந்தச் சட்டத்திற்கு எம்மெட் டில் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்டது.
இவர் 14 வயது நிரம்பிய ஒரு கறுப்பினச் சிறுவன் ஆவார்.
இவர் 1955 ஆம் ஆண்டு மிசிசிப்பியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வெள்ளையினப் பெண் ஒருவரைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொடூரமாக கொல்லப் பட்டார்.