குரங்கு காய்ச்சலுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தல்
May 25 , 2022
1085 days
406
- குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு பெல்ஜியம் ஆகும்.
- அந்நாட்டில் யாரேனும் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அவர்கள் கட்டாயமாக 21 நாட்கள் (மூன்று வாரங்கள்) தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- உலக சுகாதார அமைப்பானது, 12 வெவ்வேறு நாடுகளில் 100 உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
- குரங்கு காய்ச்சல் என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று ஆகும்.
- இது பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவுகிறது.
- இது முதன் முறையாக 1958 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
- மனிதர்களில் இந்த நோய்த் தொற்றானது, முதல்முறையாக 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் பதிவானது.
- அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முறையே 2003 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முதல் பாதிப்பானது பதிவாகியுள்ளது.

Post Views:
406