குரு தேக் பகதூர் அவர்களின் 350 ஆம் ஆண்டு நினைவு தினம்
December 24 , 2025 14 hrs 0 min 20 0
ஒன்பதாவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 350வது தியாக ஆண்டைக் குறிக்கும் வகையில் ஹரியானா சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இவர் பின்னாளில் ஆனந்த்பூர் சாஹிப்பின் ஒரு பகுதியாக மாறிய சக்-நாங்கி நகரத்தை பஞ்சாபில் நிறுவினார்.
அவரது படைப்புகளில், சீக்கிய மதத்தின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பில் 116 கவிதைப் பாடல்கள் உள்ளன.
இந்தியாவின் கௌரவத்தைப் பாதுகாத்ததற்கும், சமயச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், உண்மை மற்றும் நீதியை நிலை நிறுத்துவதற்கும் குரு தேக் பகதூர் நினைவுகூரப்படுகிறார்.
கிஷன்புராவில் குரு தேக் பகதூர் வேளாண் கல்லூரியை அமைக்க உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
அவரது மரபை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம், அஞ்சல் தலை மற்றும் ஒரு விளக்கப்படப் புத்தகமும் வெளியிடப்பட்டன.