1621 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அமிர்தசரஸில் பிறந்த குரு தேக் பகதூர் ஒன்பதாவது சீக்கிய குரு ஆவார்.
1675 ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்களின் சமய உரிமைகளைப் பாதுகாத்ததற்காக முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் டெல்லியில் அவர் தூக்கிலிடப் பட்டார்.
2025 ஆம் ஆண்டு அவரது 350வது தியாக தினமாகும்.
சமயச் சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்காக அவருக்கு "ஹிந்த் டி சடார்-இந்தியாவின் கேடயம்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
குரு கிரந்த் சாஹிப்பில் உள்ள 115 பாடல்களை அவர் இயற்றினார்.
அவரது மகன் குரு கோபிந்த் சிங் அவருக்குப் பிறகு பத்தாவது சீக்கிய குருவாகப் பொறுப்பேற்றார்.