மேற்கு வங்காளத்தின் புருலியாவில் ஆதிவாசி குர்மி சமாஜ் மீண்டும் போராட்டங்களைத் தொடங்க உள்ளன.
மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் குர்மி சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர்.
1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குர்மிகள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டச் சமூகங்களில் சேர்க்கப்பட்டனர் மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் ST பட்டியலில் இருந்து அவர்கள் விலக்கப்பட்டனர்.
2004 ஆம் ஆண்டில், ஜார்க்கண்ட் அரசாங்கமானது இந்தச் சமூகத்தை இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினராக (OBC) வகைப்படுத்துவதற்குப் பதிலாக ST பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்தது.
ஜங்கல்மஹால் பகுதிகள் அல்லது மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவின் சோட்டா நாக்பூர் பீடபூமி மற்றும் பீகாரின் சில எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதுடன் குர்மிகள் பிரதானமாக ஒரு வேளாண் சமூகத்தினர் ஆவர்.
1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுதந்திர இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, குட்மிகள் அதில் இடம் பெறவில்லை.