TNPSC Thervupettagam

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் போட்டித் திறன் (LEAN) திட்டம்

March 16 , 2023 890 days 380 0
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சகமானது புதுப்பிக்கப் பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் போட்டித் திறன் (LEAN) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு உலகளாவியப் போட்டித் திறனில் பங்கேற்பதற்கான ஒரு செயல்திட்டத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் முதல் கட்டமானது உற்பத்தித் துறையையும், இரண்டாம் கட்டமானது சேவைத் துறையையும் உள்ளடக்கும்.
  • புதுப்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், நம்பகமான மற்றும் ஆலோசனை சார்ந்த கட்டணங்களுக்கான அமலாக்கச் செலவில் மத்திய அரசின் பங்களிப்பு முன்னதாக 80 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 90 சதவீதமாக இருக்கும்..
  • முன்னதாக, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான காலம் 18 மாதங்களாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
  • பெண்கள் / பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்குச் சொந்தமான மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள SFURTI தொகுதிகளின் ஓர் அங்கமாக இருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு 90% பங்களிப்புடன் கூடுதலாக 5 சதவீதப் பங்களிப்பு வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்